தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காலியாக உள்ள உதவி சமையல்காரர் பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் திருச்சி
ஆரம்ப தேதி 05.08.2024
கடைசி தேதி 01.09.2024

பதவியின் பெயர்: உதவி சமையல்காரர்

சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job:  Rs.32,000 சம்பளத்தில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் 162 காலியிடங்கள் அறிவிப்பு!

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்முக தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூபாய் 50 செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் ‘உதவி சமையல்காரர் பணியிடத்திற்கான விண்ணப்பம்’ என தெளிவாக குறிப்பிட்டு உதவி ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருவரங்க வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் 620005 என்ற முகவரிக்கு நேரிலோ /அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

New Job:  10வது தேர்ச்சி போதும்! ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம் ₹46,029

மேலும் ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையிடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.

இந்த சமயத்தை சார்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றோப்பம் பெற்று அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்றுச் சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படா விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

New Job:  Rs.32,000 சம்பளத்தில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் 162 காலியிடங்கள் அறிவிப்பு!

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

BEML நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50000

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000

காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35000

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *