ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடனை, ராமேஸ்வரம், கடலாடி ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | ராமநாதபுரம் |
ஆரம்ப நாள் | 10.05.2024 |
கடைசி நாள் | 17.05.2024 |
பணியின் பெயர்: சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள்
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், விரிவாக புரிந்துணர்வு திறன் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Sd./S.Kumaraguru, தலைவர்/ முதன்மை மாவட்ட நீதிபதி, ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ராமநாதபுரம் – 623 503.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2024
மத்திய ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு
சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு!
மாதம் Rs.67,700 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! 82 காலியிடங்கள்