தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மதுரை மண்டலத்தில் நெல் கொள்முதல் பருவ கால பணிக்கு காலியாக உள்ள 450 பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 450 |
பணியிடம் | மதுரை |
ஆரம்ப நாள் | 10.02.2025 |
கடைசி நாள் | 28.02.2025 |
1. பணியின் பெயர்: பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill Clerk)
சம்பளம்: மாதம் Rs.5,285+ DA (Rs.5087/-) + TA
காலியிடங்கள்: 150
கல்வி தகுதி: இளங்கலை அறிவியல்/ வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டம்
2. பணியின் பெயர்: பருவகால உதவுபவர் (Seasonal Helper)
சம்பளம்: மாதம் Rs. 5,218 + DA (Rs.5087/-) + TA
காலியிடங்கள்: 150
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி
3. பணியின் பெயர்: பருவகால காவலர் (Seasonal Watchman)
சம்பளம்: மாதம் Rs. 5,218 + DA (Rs.5087/-) + TA
காலியிடங்கள்: 150
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:
SC & SCA/ ST பிரிவினர் – 18 to 37 வயது
BC/ BC(M)/ MBC பிரிவினர் – 18 to 34 வயது
OC பிரிவினர் – 18 to 32 வயது
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.02.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் பணிக்கு விண்ணப்பிக்க மதுரை மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் கீழ்கண்ட முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய மின்னஞ்சல் (Email-id) முகவரியினை விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அனைத்து தொடர்புகளும் (அழைப்பு கடிதம் போன்றவை) மின்னஞ்சல் மூலமாகவே அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கப்படும் பதவியின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: துணை ஆட்சியர் / மண்டல மேலாளர், த.நா.நு.பொ.வா.கழகம், லெவல் 4 பில்டிங், 2-வது தளம், BSNL வளாகம், தல்லாகுளம், மதுரை – 625 002.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28.02.2025 மேலும் 28.02.2025 அன்று மாலை 5.00 மணிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |