திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலியாக உள்ள Lab Technician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | திருப்பூர் |
ஆரம்ப தேதி | 03.01.2025 |
கடைசி தேதி | 08.01.2025 |
பணியின் பெயர்: Lab Technician
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
- (10, +2) அறிவியல் பாடத்துடன் தேர்ச்சி மற்றும் மருத்துவ கல்வி இயக்குனரால் கையொப்பமிட்ட சான்றிதழ் பெற்ற ஆய்வுக்கூட பயிற்சி பட்டம் அல்லது பட்டயம்
- கணினி பயிற்சி சான்றிதழ்
வயது வரம்பு: 62 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.01.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.01.2025
விண்ணப்பிக்கும் முறை ?
- Bio Data with Passport size Photo
- விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்குரிய அனைத்து தகுதி சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்கள் (Attested Xerox Copies) இணைத்து அனுப்ப வேண்டும்.
- இத்துடன் ரூ.25 தபால் ஒட்டிய சுய விலாசமிட்ட 4*10 கவருடன் (இரண்டு) கையொப்பமிட்ட கடிதத்துடன் கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில் விண்ணப்பிக்கவும்.
குறிப்பு: தபால் உறையின் மேல் பதவியின் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், அறை எண்: 1, கல்யாணம் பெட்ரோல் பங்க் எதிரில், அரசு மருத்துவமனை வளாகம் (பழைய பேருந்து நிலையம் அருகில்), திருப்பூர் மாவட்டம் – 641604.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம்:
நாள்: 10.01.2025
நேரம்: காலை 10 மணி
இடம்: அறை எண்: 120, முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் – 641604.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |