செய்தி மக்கள் தொடர்புத்துறையில் நூலகர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.24,200

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

செய்தி மக்கள் தொடர்பு துறை, திருப்பூர் மாவட்டம், பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் செய்தி மக்கள் தொடர்புத்துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் திருப்பூர், தமிழ்நாடு
ஆரம்ப நாள் 24.09.2024
கடைசி நாள் 15.10.2024, 05.45 PM

பணியின் பெயர்: நூலகர் மற்றும் காப்பாளர்

சம்பளம்: மாதம் Rs.7,700 – 24,200/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் (Certificate in Library and Information Science (CLIS) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.09.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.10.2024

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://tiruppur.nic.in/ என்ற திருப்பூர் மாவட்ட அரசு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளவாறு மனுதாரரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, கல்வி, அனுபவ தகுதி சான்றிதழ் மற்றும் பிற விவரங்களுடன் கூடிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் கையொப்பமிட்டு சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலான இரண்டு புகைப்படங்கள் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் 15.10.2024 மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0421 – 2971117 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருப்பூர் மாவட்டம் – 641 601.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment