தென்காசி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்பத்தில் சமுதாயத்தில் பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சாகி ஒன் ஸ்டாப் சென்டர் (One Stop Center) துவங்கப்பட்டுள்ளது.
அதில் சுழற்சி முறையில் பணிபுரிய வழக்குப் பணியாளர் பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தென்காசி சமூக நல அலுவலகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 04 |
பணியிடம் | தென்காசி |
ஆரம்ப தேதி | 04.07.2024 |
கடைசி தேதி | 20.07.2024 |
பதவியின் பெயர்: வழக்கு பணியாளர் (Case Worker)
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: சமூகப்பணி அல்லது உளவியல் இளங்கலை பட்டம்.
பதவியின் பெயர்: பாதுகாவலர் (Security Guard)
சம்பளம்: மாதம் Rs.12,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி
பதவியின் பெயர்: பல்நோக்கு பணியாளர் (Multi Purpose Helper)
சம்பளம்: மாதம் Rs.10,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் கட்டணம் இல்லை.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://tenkasi.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், 140/5B ஸ்ரீ சக்தி நகர், தென்காசி – 627 81.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
சென்னை NIEPMD நிறுவனத்தில் Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000
இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,000
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30000
மாதம் Rs.25000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது