தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) காலியாக உள்ள 3274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 3274 |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
ஆரம்ப நாள் | 21.03.2025 |
கடைசி நாள் | 21.04.2025 |
பணியின் பெயர்: ஓட்டுநர் மற்றும் நடத்துனர்
சம்பளம்: மாதம் Rs.23,000 – 50,000/-
காலியிடங்கள்: 3274
கல்வி தகுதி:
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- முதலுதவி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
- 01.01.2025 அன்று 18 மாத அனுபவத்துடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (Heavy Vehicle Driving License) வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
OC – 24 வயது முதல் 40 வயது வரை
BC/ MBC/ DNC/ SC/ ST – 24 வயது முதல் 45 வயது வரை
OC (Ex-S) – 24 முதல் 50 வயது வரை
BC/ MBC/ DNC/ SC/ ST (Ex-S) – 24 முதல் 55 வயது வரை
விண்ணப்ப கட்டணம்:
SC/ST – Rs.590/- + 18% GST
மற்ற நபர்களுக்கு – Rs.1180/- + 18% GST
தேர்வு செய்யும் முறை:
- எழுத்துத் தேர்வு
- செய்முறை தேர்வு
- நேர்முக தேர்வு
உயரம் மற்றும் எடை: குறைந்தபட்சம் 160 செ.மீ உயரமும் 50 கிலோ எடையும் இருக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.03.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.04.2025
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் www.arasubus.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |