மதுரை மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட மேலாண்மை இயக்க மேலாண்மை அலகு, அலுவலகத்தில் உள்ள கீழ்கண்ட காலி பணியிடங்களை ஒப்பந்த முறையில் வெளிக்கொணர்வு மனிதவள நிறுவனங்கள் மூலம் பணி அமர்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 05 |
பணியிடம் | மதுரை, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 20.08.2024 |
கடைசி தேதி | 30.08.2024 |
பணியின் பெயர்: சமுதாய அமைப்பாளர்
சம்பளம்: மாதம் Rs.16,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் அடிப்படை தகுதிகள் பெற்றெடுத்தல் வேண்டும். தகவல் தொடர்பில் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பங்கள் https://madurai.nic.in/ என்ற முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தங்கள் பகுதிக்கு சம்பந்தப்பட்ட நகர வாழ்வாதார மையங்களில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இவ்வலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மனிதவள நிறுவனங்களான தங்கள் பகுதிக்கு சம்பந்தப்பட்ட நகர வாழ்வாதார மையங்கள் மற்றும் மக்கள் கற்றல் மைய அலுவலகத்தில் 30.08.2024 தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மத்திய அரசு NLC நிறுவனத்தில் 917 காலியிடங்கள் அறிவிப்பு
RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.120000 | தேர்வு கிடையாது
மக்கள் நல்வாழ்வு துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு! 64 காலியிடங்கள்