10வது படித்திருந்தால் ஸ்ரீரங்கம் கோவிலில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு சம்பளம்: Rs.18,500 | தேர்வு கிடையாது

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உப கோயில்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்து சமய அறநிலையத் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 31
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 25.10.2025
கடைசி தேதி 25.11.2025

1. பதவி: இளநிலை உதவியாளர்

சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

2. பதவி: கூர்க்கா

சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

3. பதவி: திருவலகு

சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

4. பதவி: கால்நடை பராமரிப்பாளர்

சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

New Job:  தமிழ்நாடு அரசு நில அளவை பதிவேடுகள் துறையில் எழுத்தர் வேலை! தகுதி: 10-ஆம் வகுப்பு | தேர்வு கிடையாது

5. பதவி: பெரிய சன்னதி உடல்

சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

2. யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசை பள்ளிகளில் இருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

6. பதவி: பெரிய சன்னதி வீரவண்டி

7. பதவி: பெரிய சன்னதி சேமக்களம் மற்றும் இதர வாத்தியங்கள்

சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

2. யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசை பள்ளிகளில் இருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

New Job:  12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை | தேர்வு கிடையாது

8. பதவி: தாயார் சன்னதி வீரவண்டி மற்றும் இதர வாத்தியங்கள்

சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

2. யாதொரு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசை பள்ளிகளில் இருந்து இது தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

9. பதவி: உதவி யானைப்பாகன்

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி:

1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

2. யானைக்கு பயிற்சி அளித்து, கட்டுப்படுத்தி, வழிநடத்தும் திறனுடன் யானைக்கு கட்டளையிட்டு கட்டுப்படுத்துவதற்கான மொழியை பேசும் திறனும் பெற்றிருக்க வேண்டும்

10. பதவி: சலவையாளர்

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

11. பதவி: கூட்டுபவர்

சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job:  12வது தேர்ச்சி போதும்! மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தில் வேலை! சம்பளம்: ₹19,900 – ₹63,200

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://srirangamranganathar.hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் வரிசை எண் மற்றும் பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு இணை ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620006 என்ற முகவரிக்கு நேரிலோ /அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை ஆட்டையிடனும், அஞ்சல் உறையிடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment