தென்காசி மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் (சத்துணவு பிரிவு) அலுவலகத்தில் காலியாக உள்ள Office Assistant, Data Entry Operator and Computer Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | மாவட்ட ஆட்சியர் அலுவலகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | தென்காசி, தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 31.01.2025 |
கடைசி நாள் | 15.02.2025 |
1. பணியின் பெயர்: Office Assistant
சம்பளம்: மாதம் Rs.8,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Data Entry Operator and Computer Assistant
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
- அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் ஒரு பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும்.
- கணினியில் M.S Office அனுபவப் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
- குறைந்தபட்சம் கீழ்நிலை தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.01.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.02.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://tenkasi.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட ஆட்சித் தலைவர், (சத்துணவு பிரிவு) அலுவலகம், தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், தென்காசி – 627 811.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
Office Assistant அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click here |
Data Entry Operator and Computer Assistant அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |