தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! Any Degree போதும் | தேர்வு இல்லை!

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) சார்பில், தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் 16.10.2026 வரை விண்ணப்பிக்கலாம்.

TNSRLM Recruitment 2026 – முக்கிய விவரங்கள்
நிறுவனம்தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM)
வகைதமிழ்நாடு அரசு வேலை
பதவிவட்டார ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்கள்22
பணியிடம்தூத்துக்குடி, தமிழ்நாடு
ஆரம்ப நாள்26.09.2026
கடைசி நாள்16.10.2026
விண்ணப்பிக்கும் முறைநேரில் / பதிவு தபால்

பதவி: வட்டார ஒருங்கிணைப்பாளர் (பெண்கள் மட்டும்)

சம்பளம்: ₹12,750

காலியிடங்கள்: 22

கல்வி தகுதி: 

  • இளங்கலை பட்டம் தேர்ச்சி மற்றும் கணினி MS Office குறைந்தபட்சம் 3 மாத சான்றிதழ் படிப்பு பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது Computer Science (OR) Computer Application-ல் இளங்கலை பட்டம் தேர்ச்சி.
  • கணினி மென்பொருள் சார்ந்த கல்வி தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • இருசக்கர வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • முன் அனுபவம்: மக்கள் அமைப்பு சார்ந்த திட்டங்களில் குறைந்தது குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!

வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் நேரம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனியாக தெரிவிக்கப்படும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.10.2026  மாலை 5.45 மணி

New Job👉  தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் Relationship Manager வேலை! Any Degree | தேர்வு கிடையாது | சம்பளம் ₹9.4 லட்சம்!

விண்ணப்பிக்கும் முறை?

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை தூத்துக்குடி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.thoothukudi.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் அனுப்பும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அரசு வேலை நாட்களில் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம் (இரண்டாம் தளம்), கோரம்பள்ளம் – 628101, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரியில் பதிவு தபால் மூலமாக 16.10.2026 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைத்திட வேண்டும்.

முக்கியமான நிபந்தனைகள்:

1. விண்ணப்பதார் தூத்துக்குடி மாவட்டத்தில் காலிப்பணியிட வட்டாரத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

New Job👉  மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் Data Entry Operator வேலை! 115 காலியிடங்கள் | சம்பளம் ₹15,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

2. கல்வித்தகுதி, இருப்பிடம், ஜாதி சான்று, நன்னடத்தை சான்று, கணினி பயிற்சி பெற்றதற்கான சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் இணைக்கப்பட வேண்டும்.

3. விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள் கொண்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

4. தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:
❯