தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலர் (Village Panchayat Secretary) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,900 முதல் ரூ.58,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 18.12.2026.
| TNRD Village Panchayat Secretary Recruitment 2026 | |
| நிறுவனம் | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| பதவி | கிராம ஊராட்சி செயலர் |
| காலியிடங்கள் | Short Notice-ல் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 04.12.2026 |
| கடைசி தேதி | 18.12.2026 |
பதவி: கிராம ஊராட்சி செயலர்
காலியிடங்கள்: Short Notice-ல் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை. மாவட்ட வாரியான காலிப்பணியிட விவரங்கள் விரிவான அறிவிப்பில் வெளியிடப்படும்.
சம்பளம்: மாதம் Rs.15,900 – 58,500/-
கல்வி தகுதி: 10ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- OC – 18 முதல் 35 வயது வரை
- BC, BCM, MBC, DNC – 18 முதல் 37 வயது வரை
- SC, SCA, ST, ஆதரவற்ற விதவைகள் – 18 முதல் 40 வயது வரை
- மாற்றுத்திறனாளிகள் – அதிகபட்ச வயது வரம்பில் இருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பு
- முன்னாள் ராணுவ வீரர் (OC) – 18 முதல் 50 வயது வரை
- முன்னாள் ராணுவ வீரர் (BC, BCM, MBC, DNC, SC, SCA, ST) – 18 முதல் 50 வயது வரை
விண்ணப்ப கட்டணம்:
- ST, SC, PWD – Rs.50/-
- OC, BC, BCM, MBC, DNC – Rs.100/-
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 04.12.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.12.2026
- நேர்காணல் அழைப்புக் கடிதம்: 05.01.2027
- நேர்காணல் நடைபெறும் தேதி: 19.01.2027 முதல் 21.01.2027 வரை
- தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: 25.01.2027
- பணி நியமன ஆணை வழங்கப்படும் தேதி: 27.01.2027
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| Short Notice (Dinamani News Paper) | Download |
| Short Notice (Tamil Hindu News Paper) | Download |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | – |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 04.12.2026 | – |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
- Village Panchayat Secretary Recruitment 2026 என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
- ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வித்தகுதி விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
- 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிறந்த தேதிக்கான சான்று, சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமைச் சான்றிதழ் (தேவைப்பட்டால்) ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்யவும்.
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.
- சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அல்லது பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
முக்கிய குறிப்பு: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 04.12.2026 முதல் தொடங்கும். விரிவான அறிவிப்பு வெளியான பிறகு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்களை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
