திருநெல்வேலி மாவட்டத்தின் கீழ் இயங்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 15 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | தமிழ்நாடு அரசு சத்துணவு துறை |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 15 |
| பணியிடம் | திருநெல்வேலி, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 31.12.2026 |
| கடைசி தேதி | 14.01.2026 |
பதவி: சமையல் உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.3,000 – 9,000/-
காலியிடங்கள்: 15
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் (SC) – 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
பழங்குடியினர் – 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் – 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.12.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.01.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://tirunelveli.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் மாற்றுச் சான்றிதழ், SSLC மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, சாதி மற்றும் விதவை / கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேரிலோ அல்லது பதிவஞ்சலிலோ சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு 14.01.2026 பிற்பகல் 05.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர) 14.01.2026 பிற்பகல் 05.45 மணிக்குப் பின் நேரிலோ, பதிவஞ்சலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
