கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் உளுந்தூர்பேட்டை எழுதுபொருள் மற்றும் தையல் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள இணை உறுப்பினர்கள் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | எழுதுபொருள் மற்றும் தையல் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 19.02.2025 |
கடைசி நாள் | 07.03.2025 |
பணியின் பெயர்: இணை உறுப்பினர்கள்
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி
காலியிடங்கள்: பல்வேறு
தகுதி: தையல் பயிற்சி அரசு பதிவு பெற்ற நிறுவனத்தில் குறைந்தது 3 மாதம் தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் Rs.1,20,000/- இருக்க வேண்டும். கைம்பெண்கள் (விதவை சான்று கட்டாயம்), கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் நலிவுற்ற பெண்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.02.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.03.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://kallakurichi.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 07.03.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இயக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |