12வது படித்திருந்தால் போதும்! தமிழ்நாடு அரசு வழங்கள் மற்றும் விற்பனை சங்கத்தில் வேலை | சம்பளம்: Rs.25,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு அரசு வழங்கள் மற்றும் விற்பனை சங்கத்தில் காலியாக உள்ள கணக்காளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு அரசு வழங்கள் மற்றும் விற்பனை சங்கம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் சேலம்
ஆரம்ப தேதி 09.04.2025
கடைசி தேதி 15.04.2025

1. பணியின் பெயர்: கணக்காளர்

சம்பளம்:

கணக்காளர் பதவிக்கு 1 ஆண்டுக்கு குறைவான மற்றும் புதியதாக பணியில் சேர்பவர்களுக்கு ரூ.15,000/- வரையிலும், 1 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.17,000/- வரையிலும், 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.20,000/- வரையிலும், 10 ஆண்டுக்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.25,000/- வரையிலும் ஊதியமாக வழங்கப்படும்.

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பு

2. பணியின் பெயர்: இரவுக் காவலர்

சம்பளம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இரவுக்காவலர் பதவிக்கு, 1 ஆண்டுக்கு குறைவான மற்றும் புதியதாக பணியில் சேர்பவர்களுக்கு ரூ.10,000/- வரையிலும், 1 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.12,000/- வரையிலும், 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.15,000/- வரையிலும், 10 ஆண்டுக்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.18,000/- வரையிலும் ஊதியமாக வழங்கப்படும்.

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://salem.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்துடன் (Resume/CV) தேவையான கல்விச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, வரும் 15.04.2025 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ “மேலாளர், தருமங்கலம் நகரப்பற வாணிபதாரர் மையம், அறை எண்.207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம்” என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment