12வது படித்திருந்தால் Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 04
பணியிடம் கன்னியாகுமரி, தமிழ்நாடு
ஆரம்ப நாள் 28.01.2025
கடைசி நாள் 08.02.2025

1. பணியின் பெயர்: Protection Officer (பாதுகாப்பு அலுவலர்)

சம்பளம்: மாதம் Rs.27,804/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: சமூகப்பணி / சமூகவியல் / குழந்தைகள் வளர்ச்சி / மனித உரிமைகள் / பொது நிர்வாகம் / உளவியல் / மனநலம் / சட்டம் பொது சுகாதாரம் /சமுதாய வள மேலாண்மை இவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட முதுகலை பட்டம்.

சமூகப்பணி / சமூகவியல் / குழந்தைகள் வளர்ச்சி / மனித உரிமைகள் / பொது நிர்வாகம் இளநிலை பட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு உளவியல் மனநலம் சட்டம் பொது சுகாதாரம் சமுதாயம் வள மேலாண்மை ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட இளங்கலை பட்டம்.

மேலும் கணினி அறிவு உடையவராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

2. பணியின் பெயர்: Social Worker (சமூகப் பணியாளர்)

சம்பளம்: மாதம் Rs.18,536/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/ சமூகவியல்/ சமூக அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

மேலும் கணினி அறிவு உடையவராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: DEO/ Assistant (உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குபவர்)

சம்பளம்: மாதம் Rs.11,910/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான வாரியத்தில் இருந்து பட்டய படிப்பு அல்லது கணினியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.02.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://kanniyakumari.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3வது தளம், இணைப்பு கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் – 629001.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here 
Share this:

Leave a Comment