சென்னை – திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்காக, இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் திருக்கோயிலில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும்.
| நிறுவனம் | இந்து சமய அறநிலையத் துறை |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 10 |
| பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 31.12.2025 |
| கடைசி தேதி | 30.01.2026 |
1. பதவி: இளநிலை உதவியாளர்
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2. பதவி: வசூல் எழுத்தர்
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
3. பதவி: அலுவலக உதவியாளர்
சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
4. பதவி: காவலர்
சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
5. பதவி: வேதபாராயணம்
சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். யாதொரு சமையல் நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
6. பதவி: உதவி சுயம்பாகம்
சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். கோயில்களின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.12.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2026
விண்ணப்பிக்கும் முறை:
Step 1: https://hrce.tn.gov.in/ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். (அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்)
Step 2: பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யவும்.
Step 3: பின்னர் தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை -19
Step 4: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.01.2026 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
மற்ற கோவில்களில் உள்ள வேலைவாய்ப்புகள்:
10வது படித்திருந்தால் அருள்மிகு வடபழநி முருகன் கோயிலில் எழுத்தர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது