8வது படித்திருந்தால் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.39,900 | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

அருள்மிகு ஆதிவ்யாதிஹா பக்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், பிளம்பர், அலுவலக உதவியாளர் மற்றும் மின் பணியாளர் பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்து சமய அறநிலையத் துறை
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்04
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப தேதி18.12.2025
கடைசி தேதி20.01.2026

1. பதவி: தட்டச்சர்

சம்பளம்: மாதம் ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி.

தட்டச்சில் அரசு தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதல்நிலை (அல்லது) தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (அல்லது) ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

கணினி பயன்பாடு மற்றும் அலுவலக தானியக்கத்தில் சான்றிதழ் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட இணையான தகுதி.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

2. பதவி: பிளம்பர்

சம்பளம்: மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: பிளம்பர் பாடப்பிரிவில் அரசு /அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் வழங்கிய தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

3. பதவி: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

4. பதவி: மின்பணியாளர்

சம்பளம்: மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் மின்சார வாரிய தொழில்துறை பயிற்சி (ITI)  பயின்றதற்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். மின்சார உரிமம் மாறியதால் வழங்கப்பட்ட B சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயல் அலுவலர், அருள்மிகு ஆதிவ்யாதிஹா பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில், நங்கநல்லூர், சென்னை-61.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07.01.2026 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment