தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 09 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 18.12.2025 |
| கடைசி தேதி | 02.01.2026 |
1. பதவி: அலுவலக உதவியாளர்
சம்பளம்: Rs.15,700 முதல் Rs.50,000 வரை
காலியிடங்கள்: 07
கல்வி தகுதி:
1. 8-ம் குப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். Xerox மற்றும் Printer இயந்திரங்கள் இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
2. பதவி: ஓட்டுநர்
சம்பளம்: Rs.19,500 முதல் Rs.62,000 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
1. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2) மோட்டார் வாகனங்கள் சட்டம் 1988-ன்படி உரிய அதிகாரம் பெற்ற அலுவலரால் வழங்கப்பட்ட இலகுரக வாகனங்களுக்கான செல்லத்தக்க உரிமம் Auto mechanism with First Aid-ல் அனுபவம் பெற்றுள்ளதற்கான சான்றிதழ்.
வயது வரம்பு:
OC – 18 வயது பூர்த்தியடைந்தும் 32 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
BC /MBC – 18 வயது பூர்த்தியடைந்தும் 34 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
SC, ST, விதவைகள் – 18 வயது பூர்த்தியடைந்தும் 37 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.12.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.01.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை www.tnsec.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தலைமை நிர்வாக அலுவலர், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், எண்.208/2, ஜவஹர்லால் நேரு சாலை, அரும்பாக்கம், சென்னை-600 106
சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை 1 (10 x 4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அலுவலக உதவியாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click here |
| ஓட்டுநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
