Tiruchirappalli TNSRLM Recruitment 2025

12வது படித்திருந்தால் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய வள பயிற்றுநர் வேலைவாய்ப்பு!

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

திருச்சிராப்பள்ளி மாவட்டம் 2025-2026 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் (CMTC) காலியாக உள்ள சமுதாய வளர் பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் திருச்சி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 19.09.2025
கடைசி தேதி 27.09.2025

பதவி: சமுதாய வளப் பயிற்றுநர் (Community Resource Trainer)

சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சுய உதவிக் குழுவில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.

பயிற்சி நடத்துவதற்கு தேவையான உடற்தகுதி மற்றும் திறன் இருந்தால் மட்டும் போதுமானது.

இன்றைய அரசு வேலை Click here

மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளிலாவது கலந்து கொண்டிருக்க வேண்டும்.

கைபேசி செயலிகளை பயன்படுத்த தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள் https://tiruchirappalli.nic.in/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் 19.09.2025 முதல் 27.09.2025 வரை மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *