தஞ்சாவூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் இயங்கும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | தஞ்சாவூர், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 18.02.2025 |
கடைசி தேதி | 05.03.2025 |
1. பணியின் பெயர்: ஓட்டுநர் (Driver)
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 12th Std Pass
வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
2. பணியின் பெயர்: கிளீனர் (Cleaner)
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 12th Std Pass
வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.02.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.03.2025
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://thanjavur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய சான்றுகள்:
- பிறப்புச் சான்று
- மதிப்பெண் பட்டியல்கள் (10th, 12th)
- மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)
- முன் அனுபவ சான்று
- சிறப்பு தகுதிக்கான சான்று (Ex-Service Man)
- ஓட்டுநர் உரிமம் (Heavy License)
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம், அறை எண் 334, மூன்றாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், தஞ்சாவூர் – 613010.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |