Department of Land Survey and Records Recruitment 2026

தமிழ்நாடு அரசு நில அளவை பதிவேடுகள் துறையில் எழுத்தர் வேலை! தகுதி: 10-ஆம் வகுப்பு | தேர்வு கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

அரியலூர் மாவட்டம் நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 09.02.2026 முதல் 09.03.2026 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் நில அளவை பதிவேடுகள் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் அரியலூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 09.02.2026
கடைசி தேதி 09.03.2026

பதவி: பதிவுரு எழுத்தர் (Record Clerk)

சம்பளம்: ரூ.15,900 – ரூ.58,500

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  • கணினி பற்றிய அடிப்படை அறிவு (Basic Computer Knowledge).

வயது வரம்பு:

  • பொதுப் பிரிவு – 18 முதல் 30 வயது வரை
  • BC / MBC – 18 முதல் 32 வயது வரை
  • SC / ST – 18 முதல் 35 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

குறிப்பு: தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) அனுப்பி வைக்கப்படும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அரியலூர் மாவட்ட நிலஅளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 09.03.2026 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி இயக்குர், மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை, முதல் தளம், அறை எண்.119, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *