மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை! 8ம் வகுப்பு தேர்ச்சி

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு அரசு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்திருவாரூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 28.04.2025
கடைசி தேதி 23.05.2025

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

  10ம் வகுப்பு போதும்! ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர் வேலை – தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை!

சம்பளம்: மாதம் Rs.15,700 – 50,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 34 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

குறிப்பு: நேர்காணல் தேதியும் நேரமும் பின்னர் அறிவிக்கப்படும்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.05.2025

  டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! 10th முதல் Degree வரை | சம்பளம் ₹84,200 வரை!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://tiruvarur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தலைவர், மாவட்ட குறைதீர் ஆணையம், எண் : 52, குமரன் கோவில் தெரு, திருவாரூர். 610001.

  10th, 12th, ITI, Degree படித்தவர்களுக்கு சாகித்ய அகாடமியில் வேலை! Junior Clerk, MTS, Driver உள்ளிட்ட பணிகள் | சம்பளம் ₹18,000 - ₹2,08,700

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment