தேசிய நகர்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகராட்சி / பேரூராட்சி பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | நகர்புற வாழ்வாதார மையம் (CLC) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | திருநெல்வேலி, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 24.09.2024 |
கடைசி தேதி | 10.10.2024 |
பணியின் பெயர்: சமுதாய அமைப்பாளர் (Community Organizer)
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பங்களை மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி, தொலைபேசி எண்: 9342682297 என்ற முகவரியில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவம் திருநெல்வேலி மாவட்ட இணையதளத்தில் https://tirunelveli.nic.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து கீழ் கண்ட முகவரியில் 10.10.2024 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி மாவட்டம், தொலைபேசி எண்: 9342682297.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |