8வது படித்திருந்தால் இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் காலியாக காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்10
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி10.05.2025
கடைசி தேதி09.06.2025

1. பதவியின் பெயர்: மேளக்குழு

சம்பளம்: மாதம் ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைத்துறையில் நன்கு பயிற்சி பெற்ற சான்றிதழ் அல்லது மதம் சார்ந்த இசைப்பள்ளி பயிற்சி சான்றிதழ் அல்லது தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

2. பதவியின் பெயர்: பரிசாரகர்

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

சம்பளம்: மாதம் ரூ.13,200 முதல் ரூ.41,800 வரை

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

திருக்கோயிலில் நைவேத்திய மற்றும் பிரசாதங்கள் நன்கு தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும் மற்றும் பிரசாதம் தயார் செய்தல் மற்றும் விநியோகம் செய்யவும்தெரிந்திருக்க வேண்டும்.

திருக்கோயில் பழக்கவழக்கங்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

வைகாசனம் ஆகமப்படி பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.

3. பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பதவியின் பெயர்: அத்யாபகம்

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஏதேனும் ஆகம பள்ளி அல்லது அரசு சார்ந்த வேத பாடசாலையில் 3 ஆண்டுகள் படித்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

New Job👉  மாவட்ட வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8வது முதல் Degree வரை | தேர்வு இல்லை | ₹25,000 சம்பளம்!

5. பதவியின் பெயர்: பகல் காவலர்

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

6. பதவியின் பெயர்: இரவு காவலர்

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

7. பதவியின் பெயர்: திருவலகு

சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.06.2025 மாலை 5.45 மணி வரை

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் குறிப்பிட்ட பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு “செயல் அலுவலர், அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில், எண். 6, எம்.என்.பி. கோயில் தெரு, எழும்பூர், சென்னை – 8” என்ற முகவரிக்கு நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

மேலும் ரூ.35 மதிப்புள்ள அஞ்சல் விலை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment