ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | ராமநாதபுரம், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 27.09.2024 |
கடைசி தேதி | 15.10.2024 |
பணியின் பெயர்: Assistant cum Data Entry Operator (உதவியாளர் உடன் இணைந்த கணினி இயக்குபவர்)
சம்பளம்: மாதம் Rs.11,916/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் ஆங்கிலத்தில் தட்டச்சு முதுநிலை சான்றிதழ்களும் கணினி இயக்க பயிற்சியுடன் முன் அனுபவம் பெற்றெடுத்தல் வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.10.2024
விண்ணப்பிக்கும் முறை ?
இப்பணிக்கான விண்ணப்ப படிவத்தினை https://ramanathapuram.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட நீதிமன்றம் தென்புறம், ராமநாதபுரம் – 623 503 என்ற முகவரிக்கு 15.10.2024 அன்று மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 04367 231098 அல்லது 04567 299956 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |