8ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலைத் துறையில் வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலைத் துறையில் வேலைவாய்ப்பு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் காலியாக உள்ள கீழ்கண்ட நிரந்தர பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் அருள்மிகு திரு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 04
பணியிடம் திருச்செங்கோடு
ஆரம்ப தேதி 05.09.2024
கடைசி தேதி 04.10.2024

பதவியின் பெயர்: ஓட்டுநர்

சம்பளம்: மாதம் Rs.9,250/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். முதலுதவி குறித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருடம் ஓட்டுநர் முன் அனுபவம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 01.07.2024ம் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து கல்வி தகுதி சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: “உதவி ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், திருச்செங்கோடு நகர் மற்றும் வட்டம் நாமக்கல் மாவட்டம் 637 211”.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top