தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ₹15,700 முதல் ₹50,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 30.09.2026 கடைசி நாளாகும்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, அரசு தொழில் பயிற்சி நிலையம் |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| பதவி | அலுவலக உதவியாளர் |
| காலியிடங்கள் | 01 |
| பணியிடம் | காஞ்சிபுரம் |
| ஆரம்ப தேதி | 09.09.2026 |
| கடைசி தேதி | 30.09.2026 |
பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant)
சம்பளம்: மாதம் Rs.15,700 – 50,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி (தமிழில் சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்)
வயது வரம்பு:
- OC – 18 to 32 வயது
- BC/ MBC/ DNC – 18 to 34 வயது
- SC/ SCA/ ST/ Destitute Widows of all communities – 18 to 37 வயது
மாற்றுத்திறனாளிகளுக்கு – அதிகபட்ச வயது வரம்புடன் 10 ஆண்டுகள் கூடுதலாக கணக்கில் கொள்ளப்படும்.
முன்னாள் ராணுவத்தினர்
- OC – 18 to 48 வயது
- BC/ MBC/ DNC/ SC/ SCA/ ST – 18 to 53 வயது
குறிப்பு: SSLCக்கு மேல் கல்வி தகுதி உடைய வகுப்பினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2026
எப்படி விண்ணப்பிப்பது?
1. காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2. விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன் இப்பணியிடத்திற்கான அனைத்து அசல் சான்றிதழ்களின் நகல்களை சுயசான்றப்பமிட்டு (Self Attested) இணைக்க வேண்டும்.
3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 30.09.2026 அன்று மாலை 5:45 மணிக்குள் நேரிலோ அல்லது Speed Post மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
4. தகுதி இல்லாத விண்ணப்பங்கள்/ கால தாமதமாக வரும் விண்ணப்பங்கள் / முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், எண் 26, புத்தேரி தெரு, கைலாசநாதர் கோவில் பின்புறம், காஞ்சிபுரம் – 631 502.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| இன்றைய அரசு வேலை | Click here |
