ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 1483 |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
ஆரம்ப தேதி | 10.10.2025 |
கடைசி தேதி | 09.11.2025 |
பதவி: கிராம ஊராட்சி செயலாளர்
சம்பளம்: மாதம் Rs.15,900 முதல் Rs.50,400 வரை
காலியிடங்கள்: 1483
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு வரை தமிழ் மொழியை படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
i) பொதுப்பிரிவு – 18 to 32 வயது
ii) பிற்படுத்தப்பட்டோர்/ பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினர் – 18 to 34 வயது
iii) ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர் / ஆதரவற்ற விதவை – 18 to 37 வயது
iv) மாற்றுத்திறனாளிகள் – அதிகபட்ச வயது வரம்பில் இருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பு
விண்ணப்ப கட்டணம்:
ஆதிதிராவிடர் / பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் – ரூ.50/-
இதர பிரிவினர் – ரூ.100/-
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.11.2025
விண்ணப்பிக்கும் முறை?
விண்ணப்பதாரர்கள் www.tnrd.tn.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். (இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்).
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
மாவட்ட வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை |
Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |