சென்னை, வடபழனி, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்து சமய அறநிலையத் துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 08.09.2025 |
கடைசி தேதி | 30.09.2025 |
1. பதவி: தேவார ஆசிரியர்
சம்பளம்: மாதம் ரூ.25,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு பன்னிரு திருமுறை பாடப்பிரிவை முடித்ததற்கான தேவார பாடசாலைகள் வழங்குகின்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்
2. பதவி: இசை ஆசிரியர்
சம்பளம்: மாதம் ரூ.25,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: குரலிசையில் மூன்று வருட பட்டய படிப்பு பெற்றிருக்க வேண்டும் அல்லது இசையில் பட்டைய படிப்பு முடித்திருக்க வேண்டும்.
3. பதவி: தமிழ் ஆசிரியர்
சம்பளம்: மாதம் ரூ.25,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை- 600 026.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.09.2025 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |