8ம் வகுப்பு தேர்ச்சி போதும்! ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர் வேலைவாய்ப்பு – மாத சம்பளம் Rs.19,500 | தேர்வு இல்லை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ராஜ் துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 05
பணியிடம் விழுப்புரம், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 30.12.2025
கடைசி தேதி 14.01.2026

பதவி: ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver)

சம்பளம்: மாதம் Rs.19,500 – 62,000/-

கல்வி தகுதி:

1. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

3. 5 ஆண்டுகளுக்கு குறையாமல் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: The Block Development Officer, panchayat Union, Mugaiyu என்ற பெயரில் ரூ.50 கான வங்கி வரைவினை (DD) விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.01.2026

விண்ணப்பிக்கும் முறை?

Step 1: https://viluppuram.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

Step 2: அங்கு வெளியிடப்பட்டுள்ள ஓட்டுநர் பணியிட அறிவிப்பு (Driver Recruitment Notification)-ஐ திறக்கவும்.

Step 3: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவம் (Application Form)-ஐ பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளவும். (அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்)

Step 4: பதிவிறக்கம் செய்த விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Step 5: விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, தேவையான கல்வி மற்றும் தகுதி சான்றுகளின் சுய சான்றொப்பமிட்ட நகல்கள் (Self Attested Copies) இணைக்கவும். (கல்வி தகுதி, சாதி சான்று, ஓட்டுநர் உரிமம், முன் அனுபவ சான்று போன்றவை)

Step 7: முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இணைப்புகளை ஒரு கவரில் வைத்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பவும்.

Step 8: முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment