புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Assistant cum Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 11.09.2024
கடைசி தேதி 20.09.2024

பணியின் பெயர்: Assistant cum Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.13,240/-

New Job👉  ₹33,000 சம்பளத்தில் சென்னை மாநகராட்சியில் வேலை – தேர்வு இல்லை, உடனே விண்ணப்பிக்கவும்!

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பட்டய பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி இயக்குவதில் ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

New Job👉  ரூ.18,000 சம்பளம்; தேர்வு இல்லை! தமிழக அரசு செவிலியர் வேலைவாய்ப்பு 2026: முழு விவரம் உள்ளே!

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://pudukkottai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல அலுவலக வளாகம், கல்யாணராமபுரம் 1ம் வீதி, திருக்கோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை – 622002. தொலைபேசி எண்: 04322-221266 / 6369029895.

New Job👉  அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை: 10-வது முடித்திருந்தால் போதும்.. தேர்வு கிடையாது! உடனே விண்ணப்பியுங்கள்!

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment