நாகப்பட்டினம் மாவட்ட சத்துணவு மையத்தில் 93 காலியிடங்கள் அறிவிப்பு! 10வது தேர்ச்சி/தோல்வி | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

சத்துணவு திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 93 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு அரசு சத்துணவு துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 93
பணியிடம் நாகப்பட்டினம்
ஆரம்ப தேதி 12.04.2025
கடைசி தேதி 28.04.2025

பணியின் பெயர்: சமையல் உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.3,000 – 9,000/-

காலியிடங்கள்: 93

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் (SC) – 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

பழங்குடியினர் – 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் – 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2025 மாலை 5.45 மணி வரை

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை www.nagapattinam.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் / மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய சான்றிதழ்களின் நகல்கள்:

  1. பள்ளி மாற்றுச் சான்றிதழ்
  2. SSLC மதிப்பெண் சான்றிதழ்
  3. குடும்ப அட்டை
  4. இருப்பிட சான்று
  5. ஆதார் அட்டை
  6. சாதி சான்று
  7. விதவை, கணவரால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்றிதழ்
  8. மாற்றுத்திறனாளி அடையாள அட்டை

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment