10ம் வகுப்பு போதும்! ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர் வேலை – தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை!

WhatsApp ChannelJoin Now

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் (Record Clerk) பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதி திராவிடர் (SC) பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், காலியிடம், தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனம்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்முதுகுளத்தூர், இராமநாதபுரம் மாவட்டம்
ஆரம்ப தேதி 01.09.2026
கடைசி தேதி 30.09.2026

பதவி: பதிவறை எழுத்தர் (Record Clerk)

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

சம்பளம்: மாதம் Rs.15,900 – 58,500/-

காலியிடங்கள்: 01 ஆதி திராவிடர்(SC)

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

i) ஆதி திராவிடர் (SC) – 18 to 37 வயது

இன்றைய வேலைவாய்ப்பு Click here

ii) மாற்றுத்திறனாளிகள் – அதிகபட்ச வயது வரம்பிலிருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பு

iii) முன்னாள் இராணுவ வீரர் – 18 to 55 வயது

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2026, மாலை 5.45 மணி

New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

விண்ணப்பிக்கும் முறை?

1) விண்ணப்பதாரர்கள் இராமநாதபுரம் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

2) பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணபத்தினை பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 30.09.2026 மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், முதுகுளத்தூர் 623 704, இராமநாதபுரம் மாவட்டம்.

3) விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். (இருப்பிட சான்று தொடர்புடைய வட்டாட்சியரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்).

4) வயது மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்படும். தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும்.

New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் எழுத்தர் வேலை 2026 – 10ஆம் வகுப்பு போதும்! தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,500 வரை!

5) முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

6) காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.

7) தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் குறித்த விபரங்கள் நேர்காணல் கடிதம் (Call Letter) மூலம் தனியே அனுப்பி வைக்கப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
இன்றைய அரசு வேலைClick here
Share this: