8வது படித்திருந்தால் தொட்டில் குழந்தை திட்டத்தில் உதவியாளர், காவலர் வேலை! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தேனி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் தொட்டில் குழந்தை திட்டத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் குழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் தேனி
ஆரம்ப நாள் 23.04.2025
கடைசி நாள் 07.05.2025

1. பணியின் பெயர்: Helper (உதவியாளர்)

சம்பளம்: மாதம் Rs.4,500/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

2. பணியின் பெயர்: Night Watchman (இரவு காவலர்)

சம்பளம்: மாதம் Rs.4,500/-

காலியிடங்கள்: 01

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://theni.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: District Child Protection Officer, District Child Protection Office, Collectorate Campus, District Block Level Officer Building -II Collectorate Campus, District Employment Office Upstairs Theni – 625 531.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment