ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை (ICDS) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 7,783 |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
ஆரம்ப நாள் | 07.04.2025 |
கடைசி நாள் | 23.04.2025 |
1. பணியின் பெயர்: அங்கன்வாடி பணியாளர்
சம்பளம்: மாதம் Rs.7,700 – 24,200/-
காலியிடங்கள்: 3,886
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: குறு அங்கன்வாடி பணியாளர்
சம்பளம்: மாதம் Rs.5,700 – 18,000/-
காலியிடங்கள்: 305
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: அங்கன்வாடி உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.4,100 – 12,500/-
காலியிடங்கள்: 3,592
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
குறிப்பு: பட்டியல், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் வயது விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.04.2025
விண்ணப்பிக்கும் முறை:
தமிழக அரசு அங்கன்வாடி பணியிடங்களுக்கான அரசாணை | Click here |
அங்கன்வாடி பணியாளர் விண்ணப்ப படிவம் | Click here |
குறு அங்கன்வாடி பணியாளர் விண்ணப்ப படிவம் | Click here |
அங்கன்வாடி உதவியாளர் விண்ணப்ப படிவம் | Click here |
CDPO Address | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |