தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பதிவறை எழுத்தர் (Record Clerk) பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி பெற்ற SC பிரிவினர் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹58,500 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு கிடையாது; நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
| TNRD Recruitment 2026 | |
| நிறுவனம் | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| பதவி | அலுவலக உதவியாளர் |
| காலியிடங்கள் | 01 |
| பணியிடம் | வேலூர், தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 28.10.2026 |
| கடைசி தேதி | 26.11.2026 |
பதவி: பதிவறை எழுத்தர் (Record Clerk)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் Rs.15,900 – 58,500/-
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி
வயது வரம்பு:
- ஆதி திராவிடர் (SC) – 18 முதல் 42 வயது வரை
- மாற்றுத்திறனாளிகள் – அதிகபட்ச வயது வரம்பில் இருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பு
- முன்னாள் ராணுவ வீரர் – 18 முதல் 55 வயது வரை
விண்ணப்ப கட்டணம்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க எந்தவித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Pdf |
| விண்ணப்ப படிவம் | Download Pdf |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
விண்ணப்பிப்பது எப்படி?
1) விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://vellore.nic.in/notice_category/recruitment/ கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2) பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணபத்தினை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக கிடைக்கும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம், “A- Block, 3-வது தளம், சத்துவாச்சாரி, வேலூர்- 632 009.
3) விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.(இருப்பிட சான்று தொடர்புடைய வட்டாட்சியரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்).
4) வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்படும். தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும்.
5) முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
6) காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
7) தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் குறித்த விபரங்கள் நேர்காணல் கடிதம் (Call Letter) மூலம் தனியே அனுப்பி வைக்கப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
