மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் (Juvenile Justice Board) காலியாக உள்ள உதவியாளர் மற்றும் அமர்வு எழுத்தர், இளநிலை உதவியாளர் மற்றும் பதிவேடு எழுத்தர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு இல்லாமல், நேர்காணல் மூலமே தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புசேவைகள் துறை |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 03 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 14.10.2026 |
| கடைசி தேதி | 30.10.2026 |
1. பதவி: உதவியாளர் மற்றும் அமர்வு எழுத்தர் (Assistant-cum. Bench Clerk)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் Rs.25,000/-
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் அறிவியல், கலை, வணிகம், பொறியியல், மருத்துவம் அல்லது வேறு ஏதேனும் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணினி டிப்ளமோ அல்லது Computer on Office Automation தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
2. பதவி: இளநிலை உதவியாளர் மற்றும் பதிவேடு எழுத்தர் (Junior Assistant-cum Record Clerk)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் Rs.20,000/-
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
3. பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் Rs.13,000/-
கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம்: இந்த பணிக்கு விண்ணப்பிக்க எந்தவித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Pdf |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
விண்ணப்பிக்கும் முறை?
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, உரிய முறையில் பூர்த்தி செய்து, கல்வி மற்றும் இதர தகுதிகளுக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, 30.10.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், பெரும் திட்ட அலுவலக வளாகம், 3ம் தளம், மதுரை-625020.
தாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்களோ அல்லது முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாமலோ அல்லது முறையாக ஆவணங்கள் இணைக்கப்படாமல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
