திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் Jeep Driver வேலை! 8ம் வகுப்பு போதும் – சம்பளம் ₹71,900 வரை | தேர்வு இல்லை!

WhatsApp ChannelJoin Now

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி, செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தது 5 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் உள்ள பழங்குடியின (ST) விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு மாதம் ₹19,500 முதல் ₹71,900 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கான முழுமையான தகவல்களை கீழே காணலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
வகைதமிழ்நாடு அரசு வேலை
பதவிஈப்பு ஓட்டுநர்
காலியிடங்கள்01
பணியிடம்திருச்சி
ஆரம்ப தேதி 10.09.2026
கடைசி தேதி 09.10.2026

பதவி: ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver)

சம்பளம்: மாதம் Rs.19,500 – 71,900/-

New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் + செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் + குறைந்தது 5 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம்.

வயது வரம்பு:

i) பழங்குடியினர் (ST) – 18 to 42 வயது

இன்றைய வேலைவாய்ப்பு Click here

ii) மாற்றுத்திறனாளிகள் – 18 to 52 வயது

iii) முன்னாள் இராணுவ வீரர் – 18 to 55 வயது

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.10.2026 பிற்பகல் 5.45 மணிவரை

எப்படி விண்ணப்பிப்பது?

1. தகுதிபுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

2. விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகவும் சரியாகவும் பூர்த்தி செய்ய வேண்டும்.

3. விண்ணப்பதாரர் கல்வி தகுதி குறித்த சான்று, இருப்பிட சான்று, சாதிச்சான்று மற்றும் பணி முன் அனுபவச் சான்று ஆகியவை சான்றொப்பமிடப்பட்டு கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். குறிப்பிடப்பட்ட சான்றுகள் இணைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

4. இப்பணியிடம் பழங்குடியினருக்கான குறைவு பணியிடமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால் பழங்குடியினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

5. அஞ்சல் வில்லை ரூ.30 ஒட்டப்பட்ட சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் உறை 10×4 inches postal Cover) விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

6. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை 09.10.2026 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.

New Job👉  போலீஸ் வேலையில் சேர சூப்பர் வாய்ப்பு! SSC-ல் SI பதவிக்கு 1,871 காலியிடங்கள் – Degree போதும்; ₹1.12 லட்சம் வரை சம்பளம்

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி பிரிவு), 3-வது தளம், திருச்சிராப்பள்ளி – 620 001.

7. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

8. காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது.

9. தகுதியயுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்கள் நேர்காணல் கடிதம் (Call letter) மூலம் அனுப்பி வைக்கப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
இன்றைய அரசு வேலைClick here
Share this: